Thursday, September 1, 2011

நம்பியவரைக் கைவிடாதீர்



* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.


* மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற்காகவே அல்லாமல், இறைவன் உங்கள் மீது ஜகாத்தைக் கடமையாக்கவில்லை.


* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும்.


* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் பிள்ளைகளை நல்ல விதமாக நடத்தட்டும்.


* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால் அதை அடைக்கலப் பொருளைப் போல் பாதுகாத்து வையுங்கள்.


* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.


- நபிகள் நாயகம்









No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...