Monday, March 15, 2010

ஹதீஸ் கூறுகிறது

யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது.




ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்படுங்கள்

மேலும் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்.(சூரா:அத்தவ்பா119)



ஒரு கூட்டத்தினர் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்தால் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள்.அவர்களை ரஹ்மத் மூடிக்கொள்கிறது.

அல்லாஹ் தனது பரிசுத்த (மலக்குகளின்) சபையில்

அவர்களைப் பற்றிப் பேசுகிறான் என்று திருநபி ஸ்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அருளினார்கள்.



ஓர் உர்தூ கவிதை கூறுகிறது.



கண்ணிருந்தும் அவன் முகம் பார்க்காமல்

செவியிருந்தும் அவன் குரல் கேட்காமல்

மண்மேலே நானிருந்தும் பயன் என்ன?

குருடாக செவிடாக ஆவதே மேலாகும்



ஒரு ஹதீஸ் கூறுகிறது பூமியில் இருப்பவர்களுக்கு வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல வானத்தில் இருப்பவர்களுக்குப் பூமியில் அல்லாஹ்வை திக்ரு செய்யும் கூட்டங்கள் மின்னுகின்றன என்று ஹஜ்ரத் அபூஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கிறார்கள்



அறிந்து கொள்வீராக! அல்லாஹ்வை திக்ரு செய்வதனால் இதயங்கள் அமைதி பெருகின்றன.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...