Saturday, February 21, 2009

தொழாதவருக்குரிய வேதனை

உலகில் உண்டாகும் ஐந்து வேதனை
1.அவரின் ஆயுளின் பரக்கத் அகற்றப்படும். அதனால் அவரின் வாழ்கை விருத்தியற்றதாகிவிடும்
2.அவரின் முகத்திலிருந்து நல்லோரின் அடையாளம் அழிக்கப்பட்டுவிடும்.
3. அவர் எவ்வளவு நற்கிரியை புரிந்தாலும் அதற்கு இறைவனிடம் பலன் கிடைக்காது.
4.அவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படமாட்டாது.
5.அவருக்காக றல்லடியார்கள் பிரார்த்தனை செய்தாலும் அதுவும் அங்கீகரிக்கப்படமாட்டாது.
மரணிக்கும்போது உண்டாகும் மூன்று வேதனைகள்
1.அவர் இழிவான நிலையில் மரணிப்பார்.
2.அவர் பட்டினி பசியோடு மரணிப்பார்.
3.கடல் நீரெல்லாம் புகட்டினாலும் தாகம் தீராதவராக மரணிப்பார்.
மண்ணறையில் உண்டாகும் ழூன்று வேதனைகள்
1.அவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னும்வரை அவரைக் கப்ரு நேருங்கும் .
2.அவரின் கப்ரில் நெருப்பு ழூட்டப்படும். அதில் அவர் கியாமத்நாள்வரை வெந்து வேதனைபடுவார்கள்.
3.அவரின் கப்ரில் ஷூஜாஃ அக்ரஃ என்ற கனல் கக்கும் கண்களுடைய இரும்புபோன்ற நகங்களுள்ள ஒரு பாம்பு சாட்டபடும் அது அவருடன்பேசும். அதாவது உன்னை வேதனை செய்வதற்காக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஆதலால் நீ பஜ்ருத்தொமுகையை விட்டதற்காக லுஹர் வரையிலும்.லுஹர்தொமுகையை விட்டதற்காக அஸர் வரையிலும் அஸர்தொமுகையை விட்டதற்காக மஃரிப்வரையிலும் மஃரிப்தொமுகையை விட்டதற்காகஇஷாவரையிலும் இஷா தொமுகையை விட்டதற்காக இஷாவிலிருந்து பஜ்ரு வரையிலும் உன்னை நான் வேதனை செய்துகொண்டே இருப்பேன் என்றுகூறும்.
மறுமையில் உண்டாகும் ழூன்று வேதனைகள்
1.அவரிடம் இறைவன் மிகக் கடினமாகக்கேள்வி கேட்பான்
2.அவர்மீது இறைவனின் கோபம் உண்டாகும்.
3.அவர் மிகக் கேவலப்படுத்தப்பட்டு நரகில் தள்ளப்படுவார்


No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...