Saturday, February 28, 2009

உழைப்பின் உயர்வு

அண்ணலெம் கண்மணி r அவர்களிடம் ஒரு நாள் இளைஞர் ஒருவர் வந்து தருமம் கேட்டார். அண்ணல் நபி r அவர்கள் அவ்விளைஞரை ஏறிட்டு பார்த்தார்கள். நல்ல உடல் நலமும் வலிமையும் நிறைந்தவராக இருந்தார் அவ்விளைஞர்.

உமது வீட்டில் ஏதாவது பொருட்கள் இருக்கின்றனவா? என அவ் விளைஞரிடம் அண்ணலார் r அவர்கள் வினவினார்கள். அதற்கு அவ்விளைஞர் தன்னிடம் போர்வை ஒன்றும் பாத்திரம் ஒன்றும் இருப்பதாக கூறினார். உடனே அவற்றைக் கொண்டு வரும்படி அண்ணல் நபி r அவர்கள் ஏவினார்கள். விரைந்து சென்ற அவ்விளைஞர் தன் வீட்டீலிருந்த அவ்விரு பொருட்களையும் அண்ணல் நபி r அவர்களிடம் கொடுத்தார். தம்மைச் சுற்றியிருந்த தோழர்களிடம் அப்பொருட்களை ஏலம் விட்டார்கள் ஏந்தல் நபி r அவர்கள். ஏலத்தில் இரண்டு திர்ஹங்கள் கிடைத்தன. நபிகளார் r அவர்கள் அவற்றை அவ்விளைஞரிடம் கொடுத்து ஓர் திர்ஹத்திற்கு உணவு பொருள் வாங்கி சாப்பிடுமாறும் மற்றொரு திர்ஹத்திற்கு கோடாரி ஒன்று வாங்கி வருமாறும் கூறினார்கள். இளைஞரும் அவ்வாறே செய்தார். அவர் வாங்கி வந்த கோடாரிக்கு நபி அவர்களே கம்பு போட்டுக் கொடுத்தார்கள். காட்டுக்குச் சென்று இந்த கோடாரியால் விறகுகளை வெட்டிக் கொண்டு அவற்றைக் கடைவீதியில் விற்றுப் பிழைத்துக் கொள்ளும் என்று அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார்கள். நாட்கள் சில கழிந்த பின் அவ்விளைஞர் மீண்டும் அண்ணலார் r அவர்களிடம் வந்தார். நாயகமே! நீங்கள் சொன்னவாறே விறகுவெட்டி பிழைத்தேன். பத்து நாட்களில் பத்து திர்ஹங்கள் இலாபமாக கிடைத்தன. இப்போது நான் மகிழ்வோடு இருக்கிறேன். பிறரிடம் இரந்துண்டு வாழ வேண்டிய தேவை எனக்கில்லை என்று உறுதியோடும் தெளிவோடும் கூறினார்.

பிச்சை எடுப்போரை அல்லாஹ் விரும்புவதில்லை. நம் முயற்சிக்கு தக்க பலனை இறைவன் கொடுக்கிறான் என்பதை மறந்து விடாதே என அவ்விளைஞருக்கு அறிவுரை பகர்ந்து அனுப்பினார்கள் அண்ணலெம் கண்மணி r அவர்கள்.

கருத்து: வாங்கும் கையை விட கொடுக்கும் கையே உயர்வானது. உழைத்துண்ணும் உணவே உலகில் மிகச் சிறந்த உணவு. (அல்ஹதீஃது
)

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...