இதயத்தை மரணிக்கச் செய்யும் காரியங்களில் ஒன்று அதிகமாக சாப்பிடுவது
அதிகமாக சாப்பிட்டு உள்ளத்தை மரணிக்கச் செய்து விடாதீர்கள். ஏனெனில் அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதால் பயிர்கள் அழுகி விடுவதைப் போன்று அதிகமாக சாப்பிடுவதால் உள்ளம் செயலற்று விடுகிறது என்பது அருமை நாயகத்தின் கூற்றாக இருக்கிறது.
மேலும் ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்குரிய ஹக்கை கொடுத்து விடுங்கள். (அதாவது உதாரணமாக வயிற்றுக்குரிய ஹக் என்பது பசிக்கும் போது சாப்பிடுவதாகும்.) எனக் கூறிய கண்மணி நபிகளார் வயிற்றில் கால் பாகத்தை ஆத்மாவிற்கும், மற்றொரு கால் பாகத்தை தியானத்திற்கும் ஒதுக்குங்கள் என்றுக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
ஓரு சமயம் ஹழ்ரத் யஹ்யா (அலை) அவர்கள், ஷைத்தானை பார்த்தார்கள். அவனின் கையில் வலை ஒன்று இருந்தது. அதைக் கண்ட யஹ்யா (அலை) அவர்கள், ஷைத்தானிடம் இது என்ன வலை? என வினவ இது சிற்றின்ப வலை என ஷைத்தான் கூறினான். இவ்வலையில் யார் சிக்குவார்? என யஹ்யா (அலை) மீண்டும் கேட்க அதிகமாக சாப்பிடுபவர் இதில் சிக்குவார் என ஷைத்தான் பதிலளித்தான். இதைக் கேட்ட யஹ்யா (அலை) அவர்கள் மீண்டும் தன் கேள்வியை தொடர்ந்தார்கள். இவ்வலையில் நான் எப்போதாவது சிக்கியது உண்டா? எனக் கேட்க ஷைத்தான் ஆம் ஒரு நாள் இரவில் நீங்கள் சற்று அதிகமாக சாப்பிட்டு நித்திரை செய்து விட்டீர்கள். அன்றைய இரவு வணக்கங்களில் ஈடுபடாமல் நான் உங்களை தடுத்துவிட்டேன் என பெருமிதத்துடன் கூறியதை கேட்ட யஹ்யா (அலை) அவர்கள் இனிமேல் நான் அதிகம் சாப்பிட மாட்டேன் எனக் கூறினார்கள். இதைக் கேட்ட ஷைத்தானோ இனிமேல் நான் எந்த இரகசியத்தையும் வெளியிட மாட்டேன் எனக் கூறி அவ்விடத்தை விட்டும் விரண்டோடினான்.
நம் உயிரினும் மேலான உத்தம நபிகளார் அவர்கள் தாங்களின் ஆயுட் காலத்தில் ஒரு நேரம் கூட வயிறு நிறைய உண்டதில்லை. ஏன்? மூன்று நாட்கள் தொடர்ந்து நபிகளார் சாப்பிட்டதேயில்லை எனும் விஷயங்கள் வரலாற்றில் நாம் கண்ட உண்மை.
ஓரு மனிதன் பசித்திருக்கும் போது அவனுக்கு புதுப்புது அறிவுகள் கிடைக்கின்றன. எனவே பசியின் போது அதிகமாக சாப்பிடாமல் அளவுடன் உண்டு வளமுடன் வாழ்வோமாக!

No comments:
Post a Comment