انما الاعمال بالنيات وانما لكل امرإ ما نوى - البخاري
செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் நாடியதர்க்கான கூலி உண்டு என கண்மணி நபிகள் பூமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் புகாரி)
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். மேற்கூறிய நபிமொழியை அடிப்படையாகக் கொண்டும் உயர்ந்த நோக்கோடும் yaaseen.net செயல்படும்.
தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு நற்போதனைகளை வழங்கி அவர்களை நேரிய வழியில் செலுத்திட வேண்டும் என்ற எங்களின் அவாவை இந்த இணையதளம் வழி, ஓரளவாவது நிறைவேற்ற முடியும் என நம்புகிறோம்.
சமூகத்தில் உள்ள அவல நிலைகளை சுட்டிகாட்டி அவைகளை களைந்திட வழி சொல்வது.
இஸ்லாமிய போர்வையில் உலா வரும் குழப்பவாதிகள் போர்த்திக் கொண்டிருக்கும் போர்வையை அகற்ற முனைவது.
சத்தியத்தை எடுத்துச்சொல்லி அசத்தியத்தை அகத்திலிருந்து நீக்கிட பாடுபடுவது.
சாந்தி இஸ்லாமியம் உலகெங்கும் நிறைந்திட அரும்பாடுபட்ட அறப்பணியாளர்களின் சேவைகளை நன்றியுடன் நினைவு கூறுவது.
எழுச்சிமிக்க, போலித்தன்மையில்லாத சிந்திக்கும் திராணிமிக்க இன்றைய சமுதாயத்தை உருவாக்கிட பாடுபடுவது.
இறைவனாலும் அவனின் தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட அற்புதவான்களை சமுதாயம் மறந்திடாமல் 'நன்றி" உணர்வுடன் நினைவு கூறச் செய்வது.
என எங்கள் நோக்கங்களை இந்த பகுதியின் வழியாக செயல் படுத்திட முனைவோம் இன்ஷா அல்லாஹ்.
வல்லவனாம் அல்லாஹ் அவனின் அருள்நிறை தூதர் செய்யிதுனா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டாலும் இதனை ஏற்று அருள்வானாக ஆமீன்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment