
இந்த ஆண்டு ஹஜ் செல்பவர்களுக்கான தெளிவான விளக்கம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன் நேற்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஹஜ் - 2009ஆம் ஆண்டுக்காக ஹஜ் செல்லும் பயணிகளுக்கு வயது, பாலினம் குறித்த எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று சவூதி அரேபிய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.
மேலும், இந்த ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பருவக்கால ப்ளு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து போட்டதற்கான சான்றிதழை ஹஜ் விசா பெறுவதற்கு இரண்டு வாரம் முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.
நாள்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த ஆண்டில் தங்களுக்கான ஹஜ் பயணத்தை தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று மாலை இப்தார் நேரம் - மாலை 6,29 மணி.
சஹர் முடிவு நாளை அதிகாலை 4.16 மணி.
No comments:
Post a Comment