
பொதுவாக பிறையைப் பின்பற்றியே இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நோற்கும் காலம் அளவிடப்படுகிறது. இது குறித்து நபிகள் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் வானில் முதல் பிறையைக் கண்டால் நோன்பைத் தொடங்குங்கள். அவ்வாறு நோன்பு வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இருபத்தொன்பதாவது இரவில் அடுத்த ஷவ்வால் மாதத்துப் பிறையை நீங்கள் கண்டுவிட்டால் நோன்பு நோற்பதை விட்டுவிடுங்கள். மேகம் சூழ்ந்திருப்பின், முப்பதாக கணக்கிட்டு நிறைவு செய்து கொள்ளுங்கள்" என நோன்பு கணக்கிடுவதை நபிகள் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நோன்புக் காலத்தில் ஸஹர் எனப்படும் அதிகாலை உணவு மிகவும் அவசியம். அதிகாலை நான்கு மணி முதல் நான்கரை மணி வரை (சரியாக சூரியன் உதயமாவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு) ஸஹர் உணவை உண்ண வேண்டும்.
ஸஹருக்கும், இ·ப்தாருக்கும் (மாலையில் நோன்பை முடிப்பது) இடையில் 14 மணி நேரங்கள் கடந்திருக்க வேண்டும். அதாவது, மாலையில் சூரியன் மேற்கு வானில் மறைந்துவிட்ட உடனே நோன்பை முடிப்பதே சாலச்சிறந்தது."
No comments:
Post a Comment