ரமலான் மாதத்தில் இறுதி பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இதனை லைலத்துல் கத்ர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த லைலத்துல் கத்ரில் ஓத வேண்டியது பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :"ரமலானின் இறுதிப் பத்து வந்துவிடும்போது நபி (ஸல்) அவர்கள் இறைவழிபாட்டிற்கு ஆயத்தமாகி விடுவார்கள். இரவெல்லாம் கண் விழித்து தொழுவார்கள். தம் குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள். வழிபாடுகளில் ஈடுபடும்படிக் கூறுவார்கள்."
"நான் அண்ணலாரிடம் இறைத் தூதர் அவர்களே, லைலத்துல் கத்ர் இரவில் மாட்சிமை மிக்க இரவில் நான் என்ன சொல்லி இறைஞ்ச வேண்டும்? என்று வினவினேன்."
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ¥ம்ம இன்னக அ·புவ்வுன் துஹிப்புல் அ·ப்வ ·ப அ·பு அன்னீ (இறைவா, நீ மிகவும் மன்னிப்பவன் ஆவாய். நீ முன்னிப்பதை விரும்புகின்றாய். ஆகவே என்னை மன்னித்துவிடு) என இறைஞ்சுக" என்றார்கள்.
லைலத்துல் கத்ர் எனும் இந்த இரவில் செய்யப்படும் நற்செயல் ஆயிரம் மாதங்களில் செய்யப்படும் நற்செயல்களை விடச் சிறந்ததாகும்.
பெருமானார் அவர்கள் இந்த இரவில் செய்யப்படும் வழிபாடுகளின் சிறப்பைக் குறித்து விவரித்துள்ளார்கள்.
"எவர் ஒருவர் இந்த லைலத்துல் கத்ர் இரவில் இறை நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் நற்கூடலியைப் பெறுவதற்காகவும், இறைவழிபாட்டில் ஈடுபடுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன." பார்த்தீர்களா, அந்த இரவின் மகிமையை.
எனவே நோன்பிருக்கும் இஸ்லாமிய பெருமக்களே, இந்த லைலத்துல் கத்ர் இரவுகளில் இறைவனை எண்ணி வழிபாடு செய்வோம்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment