Friday, March 19, 2010

இறைவன் பார்ப்பது இதயங்களை

இறைவன் பார்ப்பது இதயங்களை






நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:

* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்கு கிட்டும்.

(நூல்: புகாரி, முஸ்லிம்)

* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.

(நூல்: முஸ்லிம்)

இறைவன் கூறுகின்றான்:

*நபியே!(மக்களை) எச்சரிப்பீராக: ""உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்''.

(திருக்குர்ஆன்3:29)

* இறையச்சம் உடையவர் தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்- கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. ஆனாலும், அவர் உயர்வு மிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். மேலும் (அவரைக் குறித்து) அவசியம் இறைவன் திருப்தியடைவான்.(திருக்குர்ஆன்92: 18-20)

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...