உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம்பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய் கருதுகின்றீர்கள்''.
* ''உன் சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கும் வகையில் (அவன் இல்லாதபோது) பேசுவதே புறமாகும்'' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ''கூறப்படும் விஷயம் உண்மையிலேயே என் சகோதரனிடம் காணப் பட்டாலுமா அது புறம் ஆகும்?'' என நபி அவர்களிடம் வினவப்பட்டது. ''நீ கூறும் விஷயம் அவரிடம் காணப் பட்டால் நீ பேசியது புறமாகும். அது அவரிடம் இல்லையெனில் நீ பேசியது அவதூறாகும்'' என பதிலுரைத்தார்கள் நபி அவர்கள்.
* புறம் பேசுபவனை- அவன் எவரைப் பற்றி புறம் பேசினானோ, அவர் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிப்பதில்லை.
* கொடுமைக்குள்ளானவன் குரல் எழுப்புவது புறம் ஆகாது: அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும், மறைவாகவும் நற்செயல்கள் செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியானவர்களின் தீங்கை) மன்னித்து விடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment