Thursday, January 27, 2011

அரிதாகக் கருதுங்கள்.

ஐந்து விஷயங்களை, ஐந்து விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள். முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறுமைக்கு முன் செல்வத்தையும், வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும், மரணம் வரும் முன் வாழ்க்கையையும் அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


*இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளிஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.

*ஒரு இறைநம்பிக்கையாளர் விவசாயம் செய்கிறார் அல்லது செடிகளை நடுகிறார்; அதிலிருந்து பறவைகள், மனிதர்கள், பிராணிகள் ஏதாவது சாப்பிட்டால் அந்த மனிதருடைய கணக்கில் அது ஒரு அறச்செயலாக கணக்கிடப்படுகிறது.

*ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிட்டும். உறவினர்களுக்கு தானம் வழங்கினால் இரண்டு நன்மைகள் கிட்டும். ஒன்று, தானம் வழங்கியதற்காக; மற்றொன்று உறவுகளை இணைத்ததற்காக!

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...