Friday, February 4, 2011

;">அன்பு

அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப் படுவதாகும்.


* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.


* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!


* உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை... சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.


* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.


வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து








No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...