Friday, March 11, 2011

இறைவன் உங்கள் மீது

இறைவன் தான், தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிக் கொண்டிருக்கின்றான். உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மையாதெனில், இறைவன் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.


* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.

* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.

* இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர், மற்றொருவர்க்கு சகோதரர் ஆவார். உங்கள் சகோதரர்களுக்கு இடையில் தொடர்புகளை சீர்படுத்துங்கள்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)



No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...