Thursday, April 7, 2011

கருணைமிகுந்தஇறைவன்


உங்களின் இறைவன் கருணை பொழிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறை செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.


* இறைவன் தான், தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிக் கொண்டிருக்கின்றான். உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், இறைவன் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.

* (நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்''.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...