* இறைவனுக்கு அடிபணியுங்கள், மேலும், நற்பணியாற்றுங்கள், (இதன் மூலமே) நீங்கள் வெற்றியடையக்கூடும்.* இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையைக் கைக் கொள்வீர்களாக! உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் இறைவனுக்கு அஞ்சியே வாழ்வீராக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக் கூடும்.* இறைவழியில், (உழைக்கும் போது) ஏற்படும் துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.* உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும் போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment