Friday, May 20, 2011

பணம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள்


பணம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள்



நமது நல்வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் பொன்மொழிகளைக் கேளுங்கள்.


* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையைக் கைவிடுங்கள். எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் கைவிடுங்கள்.

* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உணர்ச்சி வசப்பட்டு நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள். எதையும் தேவைக்கு அதிகமாய் எதிர்பார்க்காதீர்கள். அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதைக் கைவிடுங்கள்.

* பணம், பதவி உங்களிடம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். (அவ்வாறு செய்தால்) இன்னும் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பிரச்னை வரும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.

* புன்முறுவல் காட்டவும், சின்னச்சின்ன அன்புச்சொற்களைக் கூறவும், நன்றி சொல்லவும் மறந்து விடாதீர்கள்.

* நாவு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும். நாவு நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.

* மனதை அடக்கியாண்டு மறுமைக்கும் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம்போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...