Friday, July 8, 2011

நேரான வழி பயனளிக்கும்

நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச் செயலாகும்.


* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.

* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.

* மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.

* ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும்

மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...