Friday, August 12, 2011

உழைப்பு





நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உழைப்பு பற்றி மேலான பல கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். இதோ! உழைப்பின் மேன்மை பற்றி அவர் கூறுவதைக் கேளுங்கள்.


நான் சிறிய வயதாக இருக்கும் போது மெக்கா நகரத்து மக்கள் சிலருடைய ஆடுகளை நான் மேய்த்திருக்கிறேன். அதற்காக அவர்கள் சில வெள்ளிக்காசுகளை எனக்கு கூலியாகத் தருவார்கள். உழைப்பாளிகளின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவர்களின் கூலியைக் கொடுத்துவிடுங்கள். அவர்களின் கூலியை காலதாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்கள் ஆவர். அல்லாஹ்வுக்கும் தன் முதலாளிக்கும் கட்டுப்பட்டு முறையோடு கடமைகளை செய்யும் உழைப்பாளிகள் கியாம நாளில் இருமடங்கு நன்மை அடைவார்கள்.

ஒரு சமயம் ஒரு காட்டரபி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன், முஸாஃபஹா செய்யும் போது, அவருடைய கரத்தை நாயகம்(ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். இதனைக் கண்டு வியந்த தோழர்கள் காரணத்தைக் கேட்ட போது, "அவருடைய கரங்கள் உழைக்கும் கரங்கள், அதனால் முத்த மிட்டேன்' என்றார்கள்.

"கியாம நாளில் மூன்று மனிதர்களுக்கு எதிரியாக வருவேன். அவர்களில் ஒருவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காதவர்'' என்பது நபிகளாரின் வாக்கு. மேலும், "குடும்பத்தினரை காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப்பவர், ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.





No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...