Saturday, October 31, 2009

விதியை மாற்ற முடியாது


விதி பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதாவது:
* வானங்கள் பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் படைப்பினங்களின் அளவுமுறையை நிர்ணயித்து விட்டான். அப்போது அவனுடைய அர்ஷ் தண்ணீர் மீது இருந்தது.
* மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியடைவதாகும். மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்விடம் வேண்டுவதைக் கைவிடுவதாகும். இன்னும் மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தி அடைவதாகும்.
* துஆ பிரார்த்தனையைவிட வேறு எதுவும் விதியை மாற்ற முடியாது.
நன்மைக்கு பயன்படட்டும்
அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடை ஒன்றை அணியும்போது அதன் பெயரைக்கூறி, ""அல்லாஹ்வே! நன்றியனைத்தும் உனக்கே! நீயே இதனை எனக்கு அணிவித்தாய்! நான் உன்னிடம் இதன் நன்மையை (எனக்கு அளிக்கும்படி) கேட்கின்றேன். மேலும் எந்த நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறதோ அதன் நன்மையான அம்சத்தைக் கோருகிறேன். இந்த ஆடையின் தீமையை விட்டும் இது எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ, அதன் தீமையான அம்சத்தை விட்டும் உன் பாதுகாப்பில் என்னை நான் ஒப்படைக்கின்றேன்,'' என்பார்கள்.
விளக்கம்: ஆடையானாலும் சரி, அல்லது வேறொரு பொருளானாலும் சரி அதனைத் தீமைக்கும் பயன்படுத்தலாம், நன்மைக்கும் பயன்படுத்தலாம். ஓர் இறைவன் நம்பிக்கையாளன் ஆடையை இறைவனின் வெகுமதியாகக் கருதுகின்றான். மேலும், இந்தக் கொடை அவனுக்குக் கிடைத்ததை குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். மேலும், அந்த இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சுகின்றான்: ""நான் இந்த அருட்கொடையைப் பயன்படுத்தும்போது தீய செயல் செய்துவிடக் கூடாது. எந்தத் தீய நோக்கத்திற்காகவும் இதனை பயன்படுத்தி விடக்கூடாது. மாறாக, இதனை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் நற்பேறு எனக்குக் கிடைக்க வேண்டும்,''. அவன் இந்த பாணியில் சிந்திப்பது வெறும் ஆடையைப் பொறுத்தமட்டிலுமல்ல, ஒவ்வொரு அருட்கொடையையும் பெற்று இவ்வாறே அவன் சிந்திக்கின்றான்; இவ்விதமே அவன் இறைஞ்சு கின்றான்.

நிந்தனை செய்யாதீர்
நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்போம்.
* மற்றவரை ஒருவர் நிந்திக்கும்போது அது வானத்திற்கு செல்கின்றது. அங்கே... வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின், அது உலகத் திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின், அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது - எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது.
* ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால் விளைகின்ற பாவம் யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ, அவரையே சாரும்.
* ""ஒரு வியாபாரத்தில் பங்குதாரர்கள் இருவர் எதுவரை ஒருவரையொருவர் மோசம் செய்யாமல் இருப்பார்களோ, அதுவரை நான் அவர்களுட னேயே இருக்கின்றேன். ஆனால், ஒருவருக் கொருவர் மோசம் செய்வார்களேயானால், அவர்களை மட்டும் நான் நீங்கி விடுகின்றேன். அங்கே ஷைத்தான் குடியேறி விடுகின்றான்,'' என்று அல்லாஹ் கூறுகின்றான்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...