Friday, June 18, 2010

உண்மையையே பேசுங்கள்

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்


* உண்மை கசப்பினும் உண்மையையே பேசுங்கள். (நூல்: பைஹகி)

* ஐயத்திற்குரியதை விட்டொழித்து ஐயமில்லாததை பின்பற்றுங்கள். உண்மை அமைதியைத் தருகிறது. பொய் ஐயத்தை உண்டு பண்ணுகிறது. (நூல்: நஸயீ, திர்மிதி)

* எவன் பொய்யுரைத்து மக்களை சிரிக்க வைக்கிறானோ அவனுக்கு கேடு தான்!

* உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல. (அதுவும் ஒரு வகையில் பொய்யுரைப்பதே)

* வணிகர்களே! சரக்கை விற்பதில் வீண் பேச்சுக்கள் பேசுவதற்கும், பொய்ச்சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்.

* மூன்று நிலைகளில் பொய் கூறுவது அனுமதிக்கப்படுகிறது. 1.போரின் போது 2. மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேளைகளில் 3.(ஒருவரை ஒருவர் திருப்தியுறச் செய்யும் நோக்கில்) கணவன் மனைவிக்கிடையில் நடைபெறும் உரையாடல்களில்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...