Thursday, July 21, 2011

தர்மம் செய்வதே சிறந்தது


ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும். அவர்களோடு (தங்கள் துணையுடன்) நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள், அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலு<ம் பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இறைவன் அதில் அநேக நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.



* உங்களிடம் கடன்பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும் வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.


* நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...