Friday, July 27, 2012

தெரிந்து கொள்வோம் தொழுகை நேரம்


முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழுகையை தினமும் கடைபிடிக்கின்றனர். இந்த தொழுகை நேரங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பஜ்ர்: அதிகாலை தொழுகை- சூரியன் உதயமாவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தொழுவது.

லுஹர்: மதிய தொழுகை- சூரியன் உச்சியில் இருந்து மேற்குநோக்கி சற்று சாய்ந்த பிறகு 5 நிமிடங்கள் கழித்து தொழுவது (உத்தேசமாக மதியம் 12.10 வாக்கில்)


அஸர்: பிந்திய மதியம்- சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும்

வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்)

தெரியும் போது (உத்தேசமாக மாலை 4 மணி) தொழுவது.

மஃக்ரிப்: பிந்திய மாலை- சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)

இஷா: இரவு- படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை.ரமலான் மாதத்தில் தினமும் இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால், மற்ற மாதங்களிலும் நிச்சயம் இது தொடரும். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26



No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...