Thursday, March 4, 2010

சீரத்துன் நபி மாநாடு


மஹ்முதியா ஷாதி மஹாலில் இன்று சீரத்துன் நபி மாநாடு மிகசிறப்பாக நடைப்பெற்றது


நிகழ்ச்சி நிரலின் முதல் அமர்வில் கமிட்டி தலைவரும்,

இஸ்லாமிய ஐக்கிய ஜாஅத் மற்றும் அல்ஹாஸ் அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.ஒ. செய்யது ஆரீப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி இமாம் கத்தீப்மௌலவி ஹாபிழ் எஸ். முஜிபுர் ரஹ்மான் ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் மாநாடு துவங்கியது.
காதரிய்யா மஸ்ஜித் இமாம் நூருல்லா பாஜில் பாகவி அவர்களின் கீதமும்அல்மதரஸதுல் மஹ்முதியாவின் முதல்வர் மௌலவி ஹாபிழ் காரி எ. சித்தீக் அலி பாகவி அவர்களின் வரவேற்புரையும் நடைப்பெற்றது.

கமிட்டி தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜாஅத் மற்றும் அல்ஹாஸ் அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.ஒ. செய்யது ஆரீப் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவரும், புதுப்பள்ளி இமாம்மௌலவி ஹாபிழ் ஹாஜி எம்.எஸ்.காஜா முயினுதீன் மிஸ்பாஹி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இஸ்லாமிய ஐக்கிய ஜாஅத் மற்றும் பேருராட்சி மன்ற தலைவர் ஹாஜி எம்.எஸ் முஹம்மது யுனூஸ் அவர்கள் மற்றும் கலிமா ஹாஜி கே.ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் முன்னிலையிலும்மாநாடு நடைப்பெற்றது.
நபிபுகழ் கவிதை அதிரை அருட்கவி எம். முஹம்மது தாஹா மதனி அவர்களும், தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி எம்.அப்துல் காதிர் மரைக்காயர் உம்ரி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.அஸர் தொழுகைக்குப்பின் இரண்டாம் அமர்வுகலிமா பள்ளி மாணவர் ஹாபிழ் எஸ்.தன்வீருல் ஹக் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது.
அல்மதரஸதுல் மஹ்முதியா முதல்வர் மௌலவி ஹாபிழ் காரி எ. சித்தீக் அலி பாகவி அவர்கள் கீதமும்,நபி புகழ் பாடலை மௌலவி லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் உருது மொழியில் பாடினார். சிதம்பரம் அல்மதரஸதுல் ஆலியா முதல்வர் மௌலவி கனியுர் எம்.ஒய். இஸ்மாயில் நாஜி அவர்களின் சிறப்புரையும், சென்னை கானத்தூர் மதீனத்துல் அல்மு அரபிக்கல்லூரி நிறுவனர் மௌலானா எ. முஹம்மது ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் அவர்களின் சிறப்புரையும் நடைப்பெற்றது. மக்ரீப் தொழுகைக்கு பிறகு முன்றாம் அமர்வில்எ. முஹம்மது ஷப்பீர் அலி பாகவி ஹழ்ரத் அவர்களின் சிறப்புரை தொடர்ந்து நடைப்பெற்றது.இனாம்குளத்தூர் ஜே.ஐ.யு. அரபிக்கல்லூரி நிறுவனர் ஆன்மீக தந்தை மௌலானா இ.முஹம்மது ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹழ்ரத் அவர்களின் சிறப்புரையும் நடைப்பெற்றது. மாநாடு முடிவில் மௌலவி ஹாபிழ் எம். ஷேக் ஆதம் மழாஹிரி அவர்கள் மாநாட்டு தீர்மானத்தை வாசித்தார்.ஒ.முஹம்மது கவுஸ் அவர்களின் நன்றியுரைக்குப்பின்துஆ ஓதியபின் மாநாடு மிகசிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் தேனீர், தண்ணீர் வழங்கப்பட்டது.

மாநாட்டிற்கு ஆயிரக்கனக்கான மக்கள் வந்து சிறப்பித்தார்கள். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதுகமிட்டி இம்மாநாட்டை மிகசிறப்பாக செய்து இருந்தார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...