Sunday, March 28, 2010
திக்ரு
(நபியே) காலையிலும் மாலையிலும் உம்முடைய இரட்சகனின்
திருநாமத்தை திக்ரு செய்வீராக! இரவின் ஒரு பகுதியில் (தஹஜ்ஜூத் தொழுகையில்) அவனுக்கு ஸஜ்தாச்செய்வீராக! இன்னும் இரவில் நீண்ட நேரம் அவனைத் தஸ்பீஹ் செய்வீராக! நிச்சயமாக (காபிர்களாகிய) இவர்கள் உலகை விரும்பி இவர்களுக்குப் பின்னால் வரப்போகும் கடினமான நாளை
(மறந்து) விட்டிருக்கிறார்கள்
எவர் (தீமைகளைவிட்டு) பரிசுத்தமாகி தன்னுடைய இரட்சகனின் திருநாமத்தை திக்ரு செய்து அவனைத் தொழுதாரோ அவர் உறுதியாக வெற்றியடைந்து விட்டார்.
அல்லாஹூத்ஆலா கூறுவதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ள ஹதீஸை ஹஜ்ரத் அபூஹூரைரா ரலியல்லாஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்.
என்னுடைய அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே நான் அவனுடன் நடந்து கொள்கிறேன்.அவன் என்னை திக்ரு செய்யும் நேரத்தில் அவனுடன் நான் இருக்கிறேன். ஆவன் என்னைத் தன் மனதில்(தனிமையாக) திக்ரு செய்தால் நானும் அவனை என் மனதில்(தனிமையாக திக்ரு செய்கிறேன்.. அவன் என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்தால் நான் அதைவிடச் சிறந்த (மலக்குகளுடைய) கூட்டத்தில் அவனைப் பிரஸ்தாபம் செய்கிறேன். மேலும் அடியான் என்பக்கமாக ஒருசாண் நெருங்கி வந்தால் நான் அவன் பக்கமாக ஒரு முழம் நெருங்குகிறேன்
அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்கி வருகிறேன் அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஒடி வருகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment